search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல் முதியவர்"

    ஒட்டன்சத்திரம் அருகே கிராம உதவியாளரை மிரட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் தாலுகா வெரியப்பூர் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் இந்திரா(வயது34). சம்பவத்தன்று அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது காளிபாளையத்தை சேர்ந்த மதனகுருசாமி(63) என்பவர் சில ஆவணங்களை நகல் எடுக்கவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு இந்திரா முறையாக மனுகொடுத்து ஆவணங்களின் நகல் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.

    இதனை ஏற்கமறுத்து மதனகுருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் ஆத்திரமடைந்து இந்திராவை திட்டியும், பணிகளை செய்ய விடாமல் மிரட்டியுள்ளார். இதுகுறித்து இந்திரா அம்பிளிக்கை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மதனகுருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×